» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விஜய்யை பூமர் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:51:42 PM (IST)
முதல்-அமைச்சரை விஜய், அங்கிள் என்று கூறுவதுபோல் அவரை பூமர் அங்கிள் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எல்லாருக்கும் தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார்? எத்தனை சகோதரிகளுக்கு சீர் கிடைத்தது? எத்தனை சகோதரிகளின் வீட்டில் விசேஷம் நடந்தது; அப்போது தாய்மாமன் எங்கு போனார்? இதே தாய்மாமன் நடித்த படத்துக்கெல்லாம் இலவசமாக டிக்கெட் கொடுக்கிறாரா? காசு வாங்கிக் கொண்டுதானே டிக்கெட் கொடுக்கிறார். தாய்மாமன் என்ற வார்த்தையை யோசித்துப் பயன்படுத்த வேண்டும்.
ஸ்டாலினை மாமா (அங்கிள்) என்கிறார். அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனக்கு முதல்-அமைச்சர் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மேடையில் பேசும்போது முதல்-அமைச்சரை மாமா என்கிறீர்கள். இது சினிமாவில் கேட்பதற்கு நன்றாக இருக்கும். விசிலடிப்பார்கள்; கைதட்டுவார்கள்.
அதே வார்த்தையை நாம் பயன்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? திமுக அமைச்சர்கள் யாராவது விஜய்யை பார்த்து பூமர்னு சொன்னால் எப்படி இருக்கும்? 51 வயதில் நீங்கள் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என்று கூறினால் விஜய் மனசு கஷ்டப்படும் இல்லையா? சில வார்த்தைகளை சில இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்பு மக்கள் பக்குவத்தை எதிர்பார்க்கிறார்கள். பக்குவம் இல்லாமல் எப்படி முதல்-அமைச்சராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)

மக்கள்Aug 22, 2025 - 06:41:14 PM | Posted IP 104.2*****