» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி SKM மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14,15 வார்டு பகுதி பொதுமக்களுக்கு வடசேரி SKM மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 19.08.2025 வரை 120 முகாம்கள் நடத்தப்பட்டு, 62,638 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், தொழிலாளர் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயர்மாற்றம்முகவரி மாற்றம், ஆதார் அட்டைகளில் பெயர்மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட 4724 மனுக்களுக்கு தீர்வுகள் மற்றும் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை நடைபெறவுள்ள முகாம்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory