» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதேவேளை, கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சுப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பேச்சுப்பாறையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அருவிக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவில் குளிக்க 8வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேவேளை, பேச்சுப்பாறை அணையில் நீர் வெளியேற்றம் நாளை நிறுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் நாளை முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

