கன்னியாகுமரியின் வரலாறு (1 of 2)கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் 31 மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். மக்கள் தொகை நெருக்கத்தில் தமிழகத்தில் இரண்டாம் இடம்(ச.கிமீக்கு 1111-பேர்)(2011 கணெக்கெடுப்பின் படி) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய 4 நகராட்சி்கள் உள்ளன.

தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் ( முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டமும் இருக்கின்றன.

« Prev12Next »

Favorite tagsThoothukudi Business Directory