» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சி.எஸ்.ஐ பிஷப் வளாகத்தில் இயங்கி வருவது மார்டன் ஆங்கிலப்பள்ளி. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்த பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமதி. எமிலி மேக்தலின் தலைமை தாங்கினார். இராமன்புதூர் கலுங்கல் ஜங்ஷன் பல் மருத்துவர் பெசன்ஜாஸ் முன்னிலை வகித்தார்.
சமூக நல ஆர்வலரும் ஒரு கோடி விதைப்பந்துகள் பிரச்சாரகருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வளரும் குழந்தைகளிடையே விதைப்பந்துகள் செய்து வீச பெற்றோரிடம் கேட்டு மர விதைகள் கொண்டுவர வேண்டினார். குழந்தைகள் எப்படி விதைப்பந்துகள் செய்ய வேண்டும் என்றும் விளக்கினார். "விதைப்பந்துகளை தயக்கமின்றி செய்து எறிய வேண்டும். முளைத்தால் அவை மரம், முளைக்காவிட்டால் குமரி மண்ணுக்கு உரம்” என்று திருமாறன் குறிப்பிட்டார்.
இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "இந்திய பெருமை 2026” என்ற சான்றிதழ் வழங்கப்படுவதாக சம்பவர் வடகரை ஹரி அறிவித்தார். கூட்ட ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் பி. ஏ. ஜீவநாதன், முதல்வர் எமிலி மேக்தலின், டாக்டர். தமிழருவி மற்றும் அம்பை காந்திதாசர் செய்திருந்தனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் விதைப் பந்துகள் செய்திட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட உதவிகளுக்கு 948755 9516 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


