» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் தேசிய அளவிலான ஐஸ் ஹாக்கி போட்டியில் சாதனை படைத்த மாணவன் ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 18 வரை நடைபெற்றன. இப்போட்டியில் இந்த ஆண்டு முதன்முறையாக 15 வயதிற்குட்பட்டோருக்கான (Under-15) பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மாணவனின் சாதனை: இப்போட்டியின் 'Under-15 Boys' பிரிவில் தமிழ்நாடு அணியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மரியாகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆஷிக் கலந்துகொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இளம் வயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டான ஐஸ் ஹாக்கியில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவன் ஆஷிக்கிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் இது போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


