» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப் புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் மகேந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரணை நடத்தி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் மகன் பிஜோய்(20) மற்றும் மூன்று 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

