» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)



குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக இன்று (22.08.2025) திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடைகோடி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என பல்வேறு வளர்ச்சித்திட்டபணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கபள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடங்களும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன்விளை நியாயவிலைக்கடைக்கு உணவு தானிய வைப்பறை கட்டிடமும், 

ரூ.10 இலட்சம் மதிப்பில் கிள்ளியூர் ஊராட்சிஒன்றியம், கொல்லஞ்சி ஊராட்சிக்குடப்ட்ட குட்டவிளையில் புதிய உணவு தானிய கிடங்கு கட்டிடமும் 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் (சுகாதாரம்) ரூ.40 இலட்சம் மதிப்பில் தக்கலை ஊராட்சி ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தாறாவிளை பகுதியில் ஓலவிளை துணை சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.1.27 கோடி மதிப்பில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடமும் ரூ.1.25 கோடி மதிப்பில் மங்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், 

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.53 கோடி மதிப்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட செங்கோடி சாலை – மலவிளையில் உள்ள தேவாலயத்திற்கு அருகே பரளியாறு நதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.8.03 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பாலம் மற்றும் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆன்றணி பெர்னான்டோ, செயற்பொறியாளர் இயலிசை, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், ஒப்பந்ததாரர் கேட்சன், உதவி பொறியாளர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ஆமாAug 22, 2025 - 06:36:17 PM | Posted IP 104.2*****

பாறைகளை இடித்து கேரளாவுக்கு அனுப்பும்போது மொதல்வர் க்கு கண்ணு தெரியலேயா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory