» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கொடைரோடு-சமயநல்லூர் இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் (வ.எண்.16845) வருகிற 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் (வ.எண்.16846) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.

அதற்கு பதிலாக, ஒரு சிறப்புக்கட்டண ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரையிலும், ஒரு சிறப்புக்கட்டண ரயில் மதுரையில் இருந்து செங்கோட்டை வரையிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து மேற்கண்ட நாட்களில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

அதேபோல, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் (வ.எண்.16848) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) வருகிற 30-ஆம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

கன்னியாகுமரி-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்.07229) வருகிற 29-ஆம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory