» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்  தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில்  ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர்களின்  முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பயிற்சியில்  சேர   ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின   இனத்தை  சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18  முதல் 35 வயது  வரை  உள்ளவர்களாகவும்,  குறைந்தபட்சம்  பத்தாம்  வகுப்பு  தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ்  மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

இப்பயிற்சியினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால  அளவு  ஒரு மாதம் ஆகும்.   மேலும் பயிற்சி  பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory