» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:26:31 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 14 மாதகாலமாக நான்கு மண்டலங்களிலும் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக பிறப்பு இறப்பு பெயர் மாற்றம் முகவரி மாற்றம் செய்து கொடுக்கப்பட்டு மற்ற மனுக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு முறைப்படி தீர்வு காணப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டலங்களிலும் நடைபெற்றது. அதில் 15 வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் கொடுத்த மாநகராட்சிக்கு சம்பந்தப்பட்ட மனுக்களில் 62 பேருக்கும் மேற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 7 மனுக்களுக்கு என்று 69 பேருக்கு ஆணைகளை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக மேயர் ஜெகன் பெரியசமி பேசுகையில் "மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை சுத்தமான சுகாதாரமான மாசு இல்லாத வகையில் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் முறையாக செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் பல்வேறு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி செய்துள்ளோம்.
மழைநீர் எங்கும் தேங்காத வகையில் 11 வழித்தடத்தின் மூலம் கடலுக்கு செல்லும் வகையில் அமைத்துள்ளோம் அதே போல் பக்கிள்ஓடை 6 கிலோமீட்டர் தூரம் மழைகாலத்திற்கு முன்பாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக 30 டன் தேவையற்ற கழிவு பொருட்களை பக்கிள் ஓடையில் இருந்து மீட்டுள்ளோம் எதிர்கால தலைமுறையினர் நலன் நமக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று பொதுமக்களும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்டுள்ள 28வகையான பொருட்களான உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்உறை, மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள் எந்த தடிமனாக இருப்பினும், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் காலான உறிஞ்சிக்குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிஸாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய்,
பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட ஐஸ்கீரிம், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டிரின் தெர்மாகோல், பிளாஸ்டிக் முட்கரண்டிகள், பிளாஸ்டிக் கரண்டிகள், பிளாஸ்டிக் கத்திகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இணிப்பு பெட்டிகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் அழைப்பிதழ் அட்டைகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்கிரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் பிளாஸ்டிக் கிளரிகள், பிளாஸ்டிக் தட்டுகள், ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களாகும். யாரும் இதனை பயன்படுத்தக்கூடாது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விளம்பரம் செய்யப்படவுள்ளது. நம்ம மாநகராட்சி எல்லா வகையிலும் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு அனைவருடைய ஓத்துழைப்பு அவசியம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர அமைப்பு உதவி செயற்பொறியாளர் முனீர்அகமது, வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மீனரவணி துணை அமைப்பாளர் ராபர்ட், பகுதிசெயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். னு
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)

அன்புAug 22, 2025 - 05:18:50 PM | Posted IP 104.2*****