» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாழடைந்த கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:15:05 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே, 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே முல்லன்விளை கிராமத்தில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக சாயர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சென்று கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர். 

அந்த பெண்ணிற்கு சுமார் 45 வயது இருக்கும். நீண்ட நாட்கள் கிணற்றில் கிடந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டார என பல்வேறு கோணங்களில் சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

SivaSriAug 21, 2025 - 05:24:48 PM | Posted IP 172.7*****

பொதுவாக பாழடைந்த கிணறு , கட்டிடங்கள் யார் என்று கேட்க வேண்டும் பராமரிப்பு இல்லையென்றால் அரசு ஆக்கிரமிப்பு செய்து விடும் என்று தகவல் பதாகை வைக்க கூறுங்கள்.உடனே தூத்து வெறிச்சி கோலம் போட்டு வைத்து விடுவார்கள்.இல்லையேல் அசாம் மாநிலம் தான் நடக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory