» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை : 3பேர் கைது!

புதன் 20, ஆகஸ்ட் 2025 4:29:40 PM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் மது குடிக்க அழைத்துச் சென்று வாலிபரை அடித்துக்  கொலை செய்த வழக்கில்  3பேரை போலீசார கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுதபாணி நகரைச் சேர்ந்தவர் தனபாலன் மகன் விஜய் (22), இவரது நண்பர் கிருஷ்ணராஜபுரம் 5வது தெருவைச் சேர்ந்த மகராஜா மகன் முத்துக்குமார் (22). இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் விஜய் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பூபால்ராயர்புரத்தை சேர்ந்த  ரபேல் மகன் மரிய சஞ்சய் (24), மற்றும் பிரபு மகன் கவுதம் (21) ஆகிய மூவரும் விஜயை மதுகுடிக்க வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் லயன்ஸ் டவுன் மச்சாது குடோன் அருகே அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது விஜய்க்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவரை கட்டயைால் தாக்ககொலை செய்துள்ளனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த 3பேரையும் கைது செய்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  


மக்கள் கருத்து

பொதுமக்கள்Aug 21, 2025 - 07:18:12 AM | Posted IP 172.7*****

27இடத்தில்வெட்டு ஏன் போடவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory