» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 11:57:21 AM (IST)



தூத்துக்குடியில் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக  கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் முள்ளக்காடு கிராமத்திலுள்ள உப்பள நிலங்கள் வேறு பயன்பாட்டிற்காக (கப்பல் கட்டும் தளம்) கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். 

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் வெற்றியாக ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்குப் பின் முள்ளக்காடு கிராமத்தில் கடற்கரை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1937 முதல் எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்து குடும்பத்துடன் தரிசு நிலங்களை மேம்படுத்தி உப்பு உற்பத்தி செய்து வருகிறோம். உப்பளத் தொழிலே எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அதுவே தன்பாடு உப்பளம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1937 முதல் முள்ளக்காடு கிராமம் கடற்கரையை அடுத்து உள்ள நிலங்கள் ஆரம்ப காலத்தில் மேடு பள்ளங்களாக கிடந்த நிலத்தை ஒவ்வொருவரும் தனித்தனியே நிறைய பணம் செலவு செய்து சுமார் 90 வருடங்களுக்கு முன்பு எங்கள் மூதாதையர் குடும்பத்துடன் தங்களது உடல் உழைப்பினால் சீர்படுத்தி, பல தலைமுறைகளாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம். கப்பல் கட்டும் தளம் அமைத்தால் உப்பளங்களை நம்பியுள்ள பல லட்சம் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ParthiAug 20, 2025 - 07:16:22 PM | Posted IP 172.7*****

Unga pulllaingala ellam padaika vaikama peasama uppualathuku vealaiku anupunga da..... Ivanugalum valara maatanuga mathavangalaum valara vida maatanga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory