» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
புதன் 23, ஜூலை 2025 4:03:08 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைப்பேசி காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாவுடன் கலந்துரையாடினார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட உண்ணீயூர் கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று (23.07.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கைப்பேசி காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களிடம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து பேசியதோடு, இன்று நடைபெற்ற முகாமில் மனுக்கள் அளித்து உடனடி ஆணை பெற்ற பயனாளிகள் கைப்பேசி காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு கடந்த 15.07.2025 முதல் இன்று (23.07.2025) வரை 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கக்கூடிய மனுக்கள் மீது ஒவ்வொரு துறையும், மனுக்களில் இணைத்துள்ள ஆவணங்களை சரிபார்த்து, தகுதியான பயனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, அதற்கான பணி ஆணையினையும் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 15 துறைகளின் வாயிலாக 46 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நீங்கள் இந்த 46 சேவைகளில் எந்த சேவை உங்களுக்கு வேண்டுமோ, அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்கள் வீட்டிற்கு அருகில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பேசிய போது, அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட நகர்புற மற்றும் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்வதே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கமாகும். அதனடிப்படையில் பொதுமக்களுக்கு தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார்கள். மேலும் பொதுமக்களுக்கு அரசின் சேவையானது வீட்டிற்கு அருகிலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆதார் அட்டையில் பெயர், இருப்பிடம் மாற்றம் சான்றிதழ் பெற என சின்ன சின்ன வேலைகளுக்கு கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் சேவைகள், குடிநீர் இணைப்பு, முதலமைச்சரின் காப்பீட்டு அட்டைகள், சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறிய அளவில் தொழில் தொடங்குவதற்கான கடன்கள், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், கூட்டுறவு கடன் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்து, கடன் உதவிகள் பெற்று தொழில் முனைவோராக நீங்கள் மாற வேண்டும்.
மேலும் பொதுமக்களாகிய நீங்கள் அரசின் மீது அதிக நம்பிக்கை கொண்டு தினம் தோறும் முகாமிற்கு வருகை தந்துள்ளீர்கள் உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்கக்கூடிய சேவைகளை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு பேரூராட்சிகள் துறை சார்பில் சொத்துவரி பெயர் மாற்றம், வருமான சான்றிதழ், வருவாய்த்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் புதிய குடும்ப அட்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, எரிசக்திதுறையின் சார்பில் மின்கட்டண பெயர் மாற்றத்திற்கான ஆணை, தோட்டகலைத்துறையின் சார்பில் பழத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கினார்.
முகாமில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஜெங்கின் பிரபாகர், திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்ரவி, துணைத்தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர் செந்தில், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
