» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
புதன் 23, ஜூலை 2025 11:42:51 AM (IST)

தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்கள் குறித்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்ற பிரத்தியேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
