» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவல் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகை : அஞ்சுகிராமத்தில் பரபரப்பு

புதன் 23, ஜூலை 2025 10:13:33 AM (IST)



அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர்கள் - வியாபாரிகள் பிரச்சனை எதிரொலியாக காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி  கடை வியாபாரிகள், மெயின் பஜாரில் ஆட்டோக்கள் நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில், ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறியும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று கடை வியாபாரிகளின் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory