» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நேசமணி கல்லூரியில் 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

செவ்வாய் 22, ஜூலை 2025 4:36:45 PM (IST)

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வருகிற 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.07.2025 சனிக்கிழமை அன்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது. 

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். 

தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே CONFIRMATION MAIL அனுப்பப்படும். Confirmation Mail பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் EMPLOYMENT OFFICE NAGERCOIL என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory