» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரு மசாஜ் மையத்தில் கனடா பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
புதன் 11, பிப்ரவரி 2026 12:21:43 PM (IST)
பெங்களூருவில் கனடா நாட்டுப் பெண்ணுக்கு மசாஜ் மையத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான் சவுதா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு மசாஜ் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு கனடா நாட்டைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மசாஜ் செய்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஊழியர், அந்தப் பெண்ணை அரைகுறை ஆடையில் இருக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த ஊழியர் வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மசாஜ் செய்து கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், நிர்வாகத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அவரிடம் மசாஜிற்காகப் பெறப்பட்ட ரூ.10,000 கட்டணத்தில், ரூ.7,000 மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் இச்சம்பவம் குறித்து ஆன்லைன் வாயிலாக விதான் சவுதா போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் ஓட்டல் நிர்வாகம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது, கனடா நாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் மைய ஊழியரான 32 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்: காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:50:44 PM (IST)

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: சர்ச் தலைவர்கள் 3 பேர் பலி;தேசிய நெடுஞ்சாலை மூடல்!
வியாழன் 14, மே 2026 4:45:41 PM (IST)

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 93.84% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 2-வது இடம்!
புதன் 13, மே 2026 4:07:50 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 15 பேர் கைது - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
புதன் 13, மே 2026 3:34:06 PM (IST)

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு: இறக்குமதி வரியை 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு!
புதன் 13, மே 2026 11:27:46 AM (IST)

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)


