» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வினாத்தாள் கசிவு எதிரொலி: நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
செவ்வாய் 12, மே 2026 4:37:51 PM (IST)
வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற 2026-27-ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 5,432 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடைபெற்ற சமயத்திலேயே, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், ரகசியமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார்கள் எழுந்தன.
தற்போது எழுந்துள்ள புகார்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 3-ஆம் தேதி நடந்த தேர்வை முழுமையாக ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்தத் தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட தேர்விற்குப் பதிலாக மறுதேர்வு நடத்தப்படும். இதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு மாணவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், ஏற்கெனவே செலுத்திய தேர்வு கட்டணத்தைத் திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மே 8-ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள செய்தி மருத்துவப் படிப்பை எதிர்நோக்கியுள்ள மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:41:44 PM (IST)

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:14:32 PM (IST)


