» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!

புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)

வங்கிக் கணக்கின் 'கேஒய்சி' (KYC) விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

"KYC புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் அல்லது வங்கி சேவை நிறுத்தப்படும்" எனக் கூறி வாடிக்கையாளர்களை அச்சமடையச் செய்து பதற்றத்தில் அவசர முடிவெடுக்க வைக்கின்றனர். குறுஞ்செய்தியில் அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய இணைய இணைப்பை (Link) கிளிக் செய்ய வைத்து, போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு விவரங்களைத் திருடுகின்றனர்.

ஆர்பிஐ வழங்கும் 3 முக்கிய விதிகள்: "நில், யோசி, செயல்படு"

நில் (பதற்றமடையாதீர்): சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி வந்தவுடன் பதற்றமடைந்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.

யோசி (உண்மைத் தன்மை): வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் KYC புதுப்பிப்புக்காகச் சந்தேகத்திற்குரிய லிங்குகளைச் குறுஞ்செய்தியில் அனுப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செயல்படு (அதிகாரப்பூர்வ வழி): தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக் கூடாது. சந்தேகம் இருப்பின், வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொண்டு சரிபார்க்கவும்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:

ரகசியத் தகவல்கள்: OTP, வங்கி PIN எண், Password போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது.

வங்கி அதிகாரிகள்: வங்கி அலுவலர் எனக்கூறி தொலைபேசியில் கேட்டாலும் இத்தகவல்களைத் தரக்கூடாது.

போலி செயலிகள்: அடையாளம் தெரியாத செயலிகள் அல்லது இணையதளங்களில் தனிப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.

பணத்தை இழந்தால் என்ன செய்ய வேண்டும்?

இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் விரைந்து புகார் அளிக்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory