» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு - 12பேர் காயம்!

புதன் 26, ஆகஸ்ட் 2026 12:11:15 PM (IST)

BusAccidentelangana.jpg

தெலங்கானாவில் இன்று காலை லாரி மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில், 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு நகருக்கு 42 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் மின்சாரப் பேருந்து, இன்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், கோடாட் மண்டல் அருகே கனரகத் தொழில் துறைத் தூண்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்து லாரி மீது மோதுவதற்கு முன்பாகவே அந்த லாரி சாலைத் தடுப்புச் சுவரில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory