» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:38:13 AM (IST)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் கர்நாடக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்றும், குறுவை பாசனத்திற்கு உரிய நீரைத் திறக்காமல் பற்றாக்குறை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜூலை 30 உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் 4.536 டி.எம்.சி நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், நடப்பு பாசன ஆண்டில் ஏற்பட்டுள்ள 26.954 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை உடனே வழங்கக் கர்நாடகத்திற்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதே விவகாரத்தில் திமுக விவசாய அணி சார்பில் ஏ.கே.எஸ். விஜயன் இடையீட்டு மனுத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு வாதம் (வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்): "கர்நாடக அணைகளில் 76% நீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு உரிய நீரை அவர்கள் திறக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி ஆகஸ்ட் 16 வரை 64 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 14.814 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆணையம் 12,000 கனஅடி நீரைத் திறக்க உத்தரவிட்டும் அதைக் கர்நாடகம் பின்பற்றவில்லை. தற்போது கர்நாடகம் திறப்பது அணை நிரம்பியதால் வெளிவரும் உபரி நீரே தவிர, மனமுவந்து திறக்கும் நீர் அல்ல."
கர்நாடக அரசு வாதம் (வழக்கறிஞர் ஷியாம் திவான்): "காவிரி வடிநிலப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,600 கனஅடி நீர் தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதுதான் பிரச்சனைக்குக் காரணம்."
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்குக் கர்நாடக அரசு முழுமையாக இணங்க வேண்டும். தமிழகத்திற்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்யும் வகையில், வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


