» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி முன்னிலையில் அமைச்சரவை பதவியேற்பு!
செவ்வாய் 12, மே 2026 5:41:53 PM (IST)

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 101 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பாஜக: 81 இடங்கள், போடோலாந்து மக்கள் முன்னணி 10 இடங்களை கைப்பற்றியது
இந்த வெற்றியின் மூலம் அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. குவாஹாட்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்:
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அசாம் மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகப் பதவியேற்பிற்குப் பின் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


