» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்: காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:50:44 PM (IST)
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேரள காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில்: "திருவனந்தபுரத்தில் கடந்த மே 7-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தில், சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதன்படி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கேரளாவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, வி.டி. சதீசனை சட்டமன்றக் குழுத் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்."கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கேரளாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளது.
கேரளாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதாலா, சன்னி ஜோசப் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவியது. கடந்த ஒரு வாரமாக டெல்லியில் நிலவி வந்த இழுபறிக்குப் பிறகு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசனுக்கே முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் வி.டி. சதீசன் கேரள ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை திருவனந்தபுரத்தில் பதவியேற்கும். கேரள அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை இந்தத் தேர்தல் முடிவும், வி.டி. சதீசனின் நியமனமும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


