» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 புதிய மகளிர் விடியல் பேருந்துகள் துவக்க விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏ.ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கோட்டமேலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
புதிய பேருந்துகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ஜேக்கப். ரமேஷ் பாபு, போக்குவரத்து கழகதொழிற்சங்க பொதுச் செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி, மகாவிஷ்ணு லிங்கசாமி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடம் & பேருந்துகள் விபரம்
- தூத்துக்குடி - சுப்பிரமணியபுரம் (வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம், சாயர்புரம்)
- தூத்துக்குடி - கீழவைப்பார் (வழி: அமெரிக்கன் மருத்துவமனை, தாமஸ்புரம், தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, கல்லூர்)
- தூத்துக்குடி - பெருங்குளம் (வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, செபத்தையாபுரம், சாயர்புரம், நட்டாத்தி)
- கோவில்பட்டி - வெள்ளப்நேரி (வழி: நாலாட்டின்புதூர், வானரமுட்டி, கட்டாலங்குளம், செட்டிக்குறிச்சி, கோனார்கோட்டை)
- கோவில்பட்டி - கீழஈரால் (வழி: திட்டகுளம், கொடுக்கம்பாறை, கசவன்குன்று, செமபுதூர், டி.சண்முகபுரம், வாலம்பட்டி)
- கோவில்பட்டி - வேடப்பட்டி (வழி: லிங்கம்பட்டி, கடலையூர், மலைப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபும், அச்சங்குளம்)
- கோவில்பட்டி - அகிலாண்டபுரம் (வழி: நாலாட்டின்புதூர், இடைச்செவல், வில்லிச்சேரி, சிவஞானபுரம், சவலாப்பேரி, கரிசல்குளம்)
மக்கள் கருத்து
ஆமாDec 4, 2025 - 06:35:33 PM | Posted IP 162.1*****
தேர்தல் வரப்போகுது அதானே
இந்த பேருந்துகள்Dec 4, 2025 - 12:21:05 PM | Posted IP 104.2*****
எத்தனை நாளைக்கு வழித்தடத்தில் ஓடும்ன்னும் சொல்லீருங்க.
மேலும் தொடரும் செய்திகள்

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)

கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
சனி 6, டிசம்பர் 2025 11:40:40 AM (IST)


.gif)
BabuDec 5, 2025 - 06:52:53 PM | Posted IP 104.2*****