» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)

பாலக்காடு எக்ஸ்பிரஸை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை ரயில்வே உதவி கோட்ட மேலாளரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஆய்வு செய்ய மதுரை ரயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் வருகை புரிந்தார். அவரிடம் செய்துங்கநல்லூர் பொதுமக்கள் சார்பில் பாலக்காடு எக்ஸ்பிரஸை நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுததனர். கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் நடைமேடை மற்றும், மேம்பாலம் பணிக்காக நன்றியை தெரிவித்தனர். இரண்டாவது நடைமேடையில் மின்சார விளக்கு வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 3 வருட காலமாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும் என பொதுமக்கள் போராடி வருகிறார்கள். அந்த ரயிலை செய்துங்கநல்லூர் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி தனராஜ், எஸ்.ஐ. மாரிசுடலை, கூட்டுறவு ஆடிட்டர் திருச்செல்வம், ராணுவ வீரர் ஆறுமுகம்,வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், தவ்ஹீத் ஜமாதை சேர்ந்த அப்துல், சன்னியாசி, கூட்டறவு சங்க மேலாளர் மாரியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் வேம்பு துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)

கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
சனி 6, டிசம்பர் 2025 11:40:40 AM (IST)

வைகோ தலைமையில் சமத்துவ நடைபயணம்: ஜன.2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!
சனி 6, டிசம்பர் 2025 10:16:36 AM (IST)


.gif)