» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)



திருநெல்வேலியில் சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 43வது வார்டில் பிபிசி காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை பணியின் இங்கு உள்ள சாலைகளை அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி மிக மோசமாக நிலையில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடியும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பழிவாங்க காத்திருக்கும் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory