» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைகோ தலைமையில் சமத்துவ நடைபயணம்: ஜன.2ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!

சனி 6, டிசம்பர் 2025 10:16:36 AM (IST)

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலை​மையில் நடைபெறும் சமத்​துவ நடைபயணத்தை வருகிற ஜன.2ஆம் தேதி முதல்​வர் ஸ்​டா​லின் தொடங்கி வைக்கிறார்.

மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதி​முக சார்​பில் போதைப்​பொருள் ஒழிப்​பு, சாதி மோதல் தடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி என்​னுடைய தலை​மையி​லான சமத்​துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்​களுக்கு நடை​பெறுகிறது.

அதன்​படி 190 கி.மீ. வரை நடை​பெறும் நடைபயணத்​தை, திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, இந்​துக்​கள் வழிபடும் கோயில், கிறிஸ்​தவர்​கள் வழிபடும் தேவால​யம், இஸ்​லாமியர்​கள் வழிபடும் மசூ​தி, சீக்​கியர்​கள் வழிபடும் குருத்​வா​ராக்​கள் அடங்​கிய சின்​னங்​கள் பொருந்​திய சிவப்​பு, மஞ்​சள் நிற கொடியை எனக்கு வழங்​க​வுள்​ளார்.

இந்​நிகழ்​வில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர். சமத்துவ நடைபயணத்​துக்​காக மதி​முக தொண்​டரணி, இளைஞரணி, மாணவரணி​யில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


மக்கள் கருத்து

திருச்​சி peoplesDec 6, 2025 - 02:31:06 PM | Posted IP 162.1*****

அப்படியே நடந்து போய் த வெ க கட்சியில் சேருவார். அதோடு விஜய் கட்சி காணாமல் போயிடுவார். விஜய் திரும்பவும் நடிக்க போயிடுவார். வைகோ திரும்ப விடியல் கூட சேர்ந்து 2 சீட் வாங்குவார். இதுதான் நடக்க போகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory