» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்

சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் நலனை கருத்திற்கொண்டு பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06255) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதே நாள் இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இதேபோல், கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06257) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலை வந்தடைகிறது. 

மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06258) அதேநாள் இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory