» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்: கேரளாவின் சேர்த்தலாவில் கூடுதல் நிறுத்தம்
செவ்வாய் 17, மார்ச் 2026 10:24:55 AM (IST)
பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேர்த்தலா ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் தமிழகத்தின் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில், பயணிகளின் வசதிக்காகக் கேரள மாநிலம் சேர்த்தலா ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. எர்ணாகுளம் - ஆலப்புழா ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள சேர்த்தலா நிலையத்தில் இனி கீழ்க்கண்ட நேரங்களில் நின்று செல்லும்:
வண்டி எண் 22619 (பிலாஸ்பூர் - நெல்லை): செவ்வாய்க்கிழமை பிலாஸ்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை இரவு 8:24 மணிக்கு சேர்த்தலா வந்தடைந்து, 8:25 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
வண்டி எண் 22620 (நெல்லை - பிலாஸ்பூர்): ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், அன்று காலை 7:14 மணிக்கு சேர்த்தலா வந்தடைந்து, 7:15 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
இது வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சோதனை அடிப்படையிலான நிறுத்தத்தை ரயில் பயணிகள் நல்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

