» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பார்சல்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் போலீசார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் ஒரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சில பார்சல்கள் கேட்பாரற்று கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பார்சல்களைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர்.
சோதனையில், அந்தப் பார்சல்களில் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டத்திலிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களை ரயில்வே போலீசார், மேல் நடவடிக்கைக்காக மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரிலிருந்து கஞ்சாவை ஏற்றி வந்தனர்? என்பது குறித்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


