» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)
நாகர்கோவிலில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்கள் மாதவன், கிருஷ்ணகுமார் மற்றும் சபீன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்கிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் ராஜா, இணை அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திகுமரன் உட்படப் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். இருப்பினும், கட்சி நிர்வாகிகள் இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டது தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அண்மையில் கட்சித் தலைமைக்கு உருக்கமான கடிதம் எழுதியிருந்த கோகிலா அனிஷ் தலைமையிலான நிர்வாகிகள், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து நிற்காமல், ஆர்ப்பாட்டக்களத்தின் ஒரு பகுதியில் தனிக்குழுவாக நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோகிலா அனிஷ் கட்சித் தலைவர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "மாவட்ட அளவில் சிலர் எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்; அடிமட்டத் தொண்டர்களின் குரல் தலைமைக்குச் செல்வதில்லை" என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பூசல் இன்னும் தணியவில்லை என்பதையே இன்றைய நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தரப்பு நிர்வாகிகள் ஒருபுறம் முழக்கமிட, கோகிலா அனிஷ் தலைமையிலான குழுவினர் மற்றொரு திசையில் நின்று தனித்துவமாகத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒருவரை ஒருவர் சந்திப்பதையோ அல்லது பேசிக்கொள்வதையோ இரு தரப்பினரும் தவிர்த்தனர். இதனால், எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் அடிமட்டத் தொண்டர்கள் குழப்பமடைந்ததைக் காண முடிந்தது.
நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மாவட்ட அளவில் நிலவும் இந்தச் சிக்கலைத் தலைமை தலையிட்டுத் தீர்க்குமா? அல்லது இது மேலும் தீவிரமடையுமா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


