» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசின் 'பசுமை சாம்பியன்' விருதுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின்,முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆட்சியர் தெரிவித்ததாவது: "தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கண்டறிந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆண்டுதோறும் 100 பேருக்கு 'பசுமை சாம்பியன் விருது' வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதினைப் பெறத் தகுதி பெற்ற ஜெகதீசன் (தனிநபர் பிரிவு), இயற்கையே இறைவன் பனை விதைப்பு குழு (அமைப்பு), ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி (கல்வி நிறுவனம்)ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்:
விருது பெற்றவர்களை மனதாரப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், இனிவரும் காலங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடனும், சமூகப் பொறுப்புடனும் விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ம. நெல்லைமதி, பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


