» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுகுடிக்கப் பணம் கேட்டுத் தகராறு: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது!
திங்கள் 16, மார்ச் 2026 11:22:22 AM (IST)
எட்டயபுரத்தில், மதுகுடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, தந்தை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (49). இவரது மகன் கனகராஜ் (22). மதுப் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி வீட்டில் பணம் கேட்டுத் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
நேற்றிரவு கனகராஜ் தனது தந்தையிடம், தனது மோட்டார் சைக்கிளைப் பழுது பார்ப்பதற்கும் மது குடிப்பதற்கும் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பாலச்சந்திரன் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, கனகராஜ் தனது தந்தையைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், அருகில் இருந்த கம்பால் கனகராஜைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லைத் தூக்கி மகனின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டயபுரம் காவல் நிலையப் போலீசார், கனகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலச்சந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனைத் தந்தையே கொடூரமாகக் கொலை செய்த இச்சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

