» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள்: ஆட்சியர் இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:42:53 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு – தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அமுல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 இந்திய தேர்தல் ஆணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளதை முன்னிட்டு, அனைத்து அரசு வளாகம்/ கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் செலவில் அழிக்க / அகற்றப்பட வேண்டும். அகற்ற தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தொகையினை வசூல் செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட துறையினர் அழிக்க வேண்டும்.
பொது வளாகம்/ கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையினரால், அழிக்க / அகற்றப்பட வேண்டும் என உள்ளதால், சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் / வளாகங்கள் / சாலைகள் போன்றவை உள்ளாட்சித் துறையாக இருந்தால், குறிப்பாக உள்ளாட்சி துறையான (மாநகராட்சி / நகராட்சி / பேரூாட்சி / ஊரக வளர்ச்சி) ஆகியவற்றின் மூலமும், சம்பந்தப்பட்ட துறையானது, நெடுஞ்சாலைத்துறையாகவோ அல்லது மின்சாரத் துறையாகவோ அல்லது பொதுப்பணித்துறையாகவோ இருந்தால், அந்தந்த துறைகளின் மூலமும், அகற்றப்பட வேண்டும்.
தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர் / துணை மேயர், தலைவர் / உப தலைவர் ஆகியோரது அறைகளை பூட்டி சீலிட்டு அதன் சாவியினை தேர்தல் நன்னடத்தை விதிகள் முடியும் வரை அவ்அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தப்படாது பாதுகாப்பாக வைத்திருந்தல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை பூட்டி சீலிட்டு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒப்படைத்தல், மேலும், மேயர் / துணை மேயர், தலைவர் / உப தலைவர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின் அவ்வாகனங்களை, அவ்வாகன ஒட்டுநருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
அனைத்து அரசு அலுலகங்களிலும், கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், தேர்தல் நன்னடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல் / அகற்றுதல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி, தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிகளை தேர்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்றுப்படவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)


அடேய்Mar 12, 2026 - 04:11:49 PM | Posted IP 172.7*****