» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)
திருமண ஆசை காட்டி நர்ஸைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 16 லட்ச ரூபாயைப் பறித்த மத போதகரைப் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஹார்டர் (37). பாதிரியாரான இவர், கேரளா மாநிலத்தில் கிறிஸ்தவக் கூட்டங்கள் நடத்தி பிரபலமானவர். பிரார்த்தனை கூட்டத்தின் போது வெளிநாட்டில் நர்ஸாக வேலை பார்த்து வரும் இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டி 16 லட்ச ரூபாயைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிரியார் அந்தப் பெண்ணைக் கைவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகியதை அறிந்து அதிர்ச்சியடைந்த நர்ஸ், பந்தளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சாம் ஹார்டரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பத்தினம் திட்டா, திருவல்லா ஆகிய போலீஸ் நிலையங்களில் நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)



Siva SriMar 10, 2026 - 12:40:33 PM | Posted IP 172.7*****