» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!
வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)
தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி அண்ணாநகரை சோ்ந்தவா் கண்ணன். இவா் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அமுதாநகா் பகுதியில் நடந்த கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராம் என்பவரை கண்ணன் உள்ளிட்டோா் சோ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இது குறித்து தகவலறிந்த கண்ணனின் உறவினா்கள் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது அவா்கள், கண்ணன் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், அவா் மீது போலீசார் வேண்டுமென்றே வழக்கு போடுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கண்ணனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்ல முற்பட்ட போது, போலீஸ் ஜீப்பின் முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து போலீசார் அவா்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், கண்ணனின் உறவினா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போலீசார் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு அவா்களை அப்புறப்படுத்தினா். மேலும், கண்ணனை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)
