» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)



தக்கலையில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை பகுதியில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில், குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் அவர் பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று வருவாய்த்துறையை சார்ந்த மாவட்ட ஆட்சியரகம் கூடுதல் கட்டிடம், நான்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 3 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய கட்டி முடிக்கப்பட்ட 8 வருவாய்த்துறையை சார்ந்த கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். 

அதில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலையில் 2022-2023 நிதியாண்டில் ரூ.30.76 இலட்சம் மதிப்பில் ஒதுக்கீடு பெற்று, தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு அறை, படுக்கை அறை, அலுவலகம், சமையலறை, தங்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடம் தக்கலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ளது. மேலும் தக்கலை வருவாய் குறு வட்டத்திற்குள் பத்மநாபபுரம் ஏ, பி கிராமங்கள், முத்தலகுறிச்சி, சடையமங்கலம், கல்குளம், தக்கலை, கோதநல்லூர், குமாரபுரம், வேளிமலை ஆகிய ஒன்பது கிராமங்கள் அமைந்துள்ளன. தக்கலை வருவாய் ஆய்வாளர் முகாம் கட்டிடத்தினை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் தக்கலை வட்ட மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

விழாவில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், கல்குளம் வட்டாட்சியர் ஜாண்கெனி, அலுவலக மேலாளர் சுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர் திருரெனால்டு ஹென்றி, பொதுபணித்துதுறை உதவி பொறியாளர் (கட்டிடம்) பிராசாந்த், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory