» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)
ராஜாக்கமங்கலம் அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா(38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது-இதனை தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள்,இரண்டு மகள்கள் உள்ளதும், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)


.gif)