» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.

செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு, மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நிமிர் குழு தொடங்கி வைக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் ஐந்து உட்கோட்டத்திற்கும் பெண் போலீசார் நான்கு மற்றும் இருசக்கர வாகனத்துடன் நியமிக்கப்பட்டுள்ளனர்

கன்னியாக்குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளி -மலைவாழ் பகுதியிலிருந்து பயிலும் 11ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமலும், அரையாண்டு தேர்வு எழுதாமலும் இருந்துள்ளனர்.இந்த தகவலை அறிந்த, நிமிர் (The Rising Team) குழுவின் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சரோஜா, கலா மற்றும் தலைமை காவலர் பிஸ்மா ஆகியோர்...

பள்ளிக்கு செல்லாத மாணவிகளின் வீட்டிற்கே சென்று மாணவிகளிடம் கல்வி கற்கும் அவசியத்தை எடுத்துரைத்தும், பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் பிற்காலத்தில் படும் துயரத்தை விளக்கி, அவர்களின் பெற்றோரிடம் மாணவியின் எதிர்காலம் சிறப்பாக அமைய கல்வி ஒன்றே தீர்வு என அழகியமுறையில் அறிவுரை கூறியும்அவர்களின் நிறைகுறைகளை விசாரித்து மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் மீண்டும் சேர்த்தனர். இடைநிற்றல் இல்லாமல் மாணவிகளை தொடர்ந்து பள்ளிக்கு வர செய்து உதவி செய்த நிமிர் குழுவினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் நன்றி கூறினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory