» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)
திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் அமிர்த் பாரத் ரயிலின் கால அட்டவணையை மாற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த அம்ரித் பாரத் ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11:45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. நள்ளிரவு நேரத்தில் ரயில் நிலையம் செல்வதிலும், அங்கிருந்து ஊர்களுக்குத் திரும்புவதிலும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அச்சம் உள்ளது. நள்ளிரவு நேரத்தில் போதிய பேருந்து அல்லது இதர போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கூறியுள்ளதாவது: நேர மாற்றம்: இந்த ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் சுமார் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த ரயிலை இரணியல் ரயில் நிலையத்தில் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் - மங்களூரு ரயில்: இதேபோல் நாகர்கோவில் - மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் 19 நிறுத்தங்களில் நின்று செல்வதால், மற்ற ரயில்களை விட மெதுவாகச் செல்கிறது. எனவே இதையும் இரவு நேர ரயிலாக மாற்றியமைக்க வேண்டும்.
முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயில்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரயில்வே நிர்வாகம் இந்த நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்தால் குமரி மாவட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)


