» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இன் கீழ், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மினி விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இத் திட்டத்தின்கீழ், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட கல்லாடிமாமூடு பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மைதானம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இ மைதானத்தை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகக் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கல் முசாரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 1.77 கோடி ரூபாய் மதிப்பிலும், குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் லியோன் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களைத் தேசிய, மாநில அளவிலான விளையாட்டு வீரர்களாக மாற்றுவதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால், அனைத்து கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு மைதான ஆய்வுக்கு முன், கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் உட்படப் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)


