» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையங்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி ஒரு பயணிக்கு ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி மற்றும் ஆன்லைன் முன்பதிவு சேவையைத் தொடங்க வேண்டும் எனத் திருவனந்தபுரம் இரயில்வே கோட்ட மேலாளருக்குக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை ஆகிய இரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் மிக முக்கியமான நிலையங்களாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீகப் பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் இந்த முக்கிய இரயில் நிலையங்களில், நீளமான நடைமேடைகளைக் கடந்து செல்ல பயணிகளின் அவசரத் தேவைக்கான பேட்டரி கார் (மின்கல வாகனம்) வசதி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக நீடிக்கிறது.
திருநெல்வேலி மாதிரி மற்றும் ஆன்லைன் முன்பதிவு கோரிக்கை:
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி இரயில் நிலையத்தில் ஒரு பயணிக்கு வெறும் 10 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பேட்டரி கார் வசதி சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது. இச்சேவையானது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், அதிக சுமையுடன் குழந்தைகளோடு பயணிக்கும் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதேபோன்ற வசதியைக் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நான்கு இரயில் நிலையங்களிலும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். திருநெல்வேலியைப் போல ஒரு பயணிக்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், வெளி ஊர்களில் இருந்து இரயிலில் வந்து இறங்கும் பயணிகள் சிரமமின்றி இச்சேவையைப் பயன்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் செயலி வழியாக ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யும் வசதியையும் இணைத்து ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் சார்பாகத் திருவனந்தபுரம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)


