» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!

சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

குமரி மாவட்டம் அருமனை அருகே சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான வாலிபர் மற்றும் இளம்பெண் மது போதையில் காயங்களுடன் சாலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண், கடந்த ஜூலை 5 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அருமனை அருகே சாலையில் இவர்கள் அனைவரும் கடுமையான மது போதையில், உடலில் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளனர். 

இதைக் கண்ட பெண் காவலர் பிரேமலதா, போதையில் மயங்கிக் கிடந்த இளம் பெண்ணை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அவருடன் போதையில் காயங்களுடன் இருந்த இதர வாலிபர்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory