» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டிடத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (09.07.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தெரிவிக்கையில் – கன்னியாகுமரி அரசு மருத்துவமனையானது கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதியிலிருந்து வரும் நோயாளிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகங்கள், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
தொடர்ந்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையினை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் அவசர சேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இப்புதிய கட்டிடத்தின் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவும், முதல்தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் பின் கவனிப்பு பிரிவும் அமைக்கப்படவுள்ளது.
இப்புதிய விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு வாயிலாக நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறுவை சிகிச்சை சேவைகளை வழங்க முடியும். மேலும் நோயாளிகளின் நோய்களுக்கு விரைந்து சிசிச்சை அளிக்கவும், காலவிரயங்களை தவிர்த்திடவும் கன்னியாகுமரி நகராட்சி பகுதி மக்களுக்கும், அதன் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். எனவே இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பொதுபணித்துறை கண்காணிப்பு செயற்பொறியாளர் (திருநெல்வேலி மண்டலம்) ஸ்ரீதர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோசப் ரென்ஸ், உதவி செயற்பொறியாளர் முருகேசன், துணை இயக்குநர் (குடும்பநலப்பணி) ரவிகுமார், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கன்னியப்பன், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை அலுவலர் ஜெனட், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், தேவாளை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
