» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
விரிகோடு ரயில்வே கேட் வழியாகதான் மேம்பாலம் அமைக்கப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் விரிகோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட், ரயில்கள் செல்லும் போதெல்லாம் மூடப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே விரிகோடு ரயில்வே கேட் பகுதி வழியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 6 கிராம மக்கள் சுமார் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு ஆதரவாக விஜய் வசந்த் எம்.பி.யும், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அவர்கள் பொதுமக்களுடன் மாவட்ட கலெக்டர் அழகு மீனாவை நாகர்கோவிலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.வுடனும், நெடுஞ்சாலை துறையினரிடமும் விரிகோடு பகுதி மக்களை சந்தித்து மேம்பாலம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்டு இறுதி முடிவு எடுக்குமாறு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கருத்து கேட்பு கூட்டம்
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் விரிகோட்டில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுமக்கள் தரப்பை சேர்ந்த ஸ்டேன்லி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தங்கசாமி ஆசிரியர், பிரசன்னகுமார், உமேஷ், டாக்டர் பினுலால்சிங் ஆகியோர் பேசினர். மேலும் விஜய் வசந்த் எம்.பி., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய்குமார் மீனா மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி மாலிக் முகமது, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
அவர்கள் பொதுமக்களிடம் மேம்பாலம் சம்பந்தமான கருத்துக்கள் கேட்டறிந்தார்கள். அப்போது பொதுமக்கள் மாற்று பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை கைவிட வேண்டும் என்றும் மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கேட் பகுதி வழியாக மட்டுமே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் விவாதித்து ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு விஜய் வசந்த் எம்.பி.யும், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வும் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை கைவிடப்படும் என்றும் விரிகோடு ரயில்வே கேட் வழியாகவே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
