» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)
குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போதும் விட்டு, விட்டு மழை பெய்கிறது. இந்த மழையினால் பலருக்கு காய்ச்சல், ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் போன்ற மழைக்கால நோய்கள் பரவி வருகின்றன. இவ்வாறு காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது, சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.
மழை பெய்யும்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த மாதத்தில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான 8 நாட்களில் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தற்போது குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை விட்டு, விட்டு பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து பகுதிகள் அனைத்திலும் கொசு ஒழிப்பு பணியாளர்களும், சுகாதார பணியாளர்களும் இணைந்து கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
