» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!

புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பெற்றிடும் வகையில் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிற்வாகம்  மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து  நான் முதல்வன் /பினிஷிங்  ஸ்கூல் திட்டத்தின் கீழ்Eco Tourism & Hospitality Executive and Tourist Guide   பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழியல் சுற்றுலா தலத்தில்  11.07.2025 முதல் 30 நாட்கள்   200 மணி நேரம்  செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியாக செயல்படலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்தவர்கள்  மட்டும்  கல்வி தகுதி சான்றிதழ், ஆதார்,வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் Pயளளிழசவ ளணைந Phழவழ வுடன் சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி  என்ற முகவரிக்கு நேரில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் 10.07.2025 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory