» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:23:48 PM (IST)



மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் ஆட்சியர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒருபகுதியான மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ் நகரில் உள்ள 298 குடியிருப்புகளில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.26.20 இலட்சம் மதிப்பீட்டில் 233 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ள 65 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும்,  

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10.98 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிகளையும்,  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.370.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 56 குடியிருப்புகளையும், கூடுதலாக ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 04 குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும், மேலும், 16 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதனைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 528 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும், 

கோமஸ்புரத்தில் ரூ.186.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மின்தகன மேடை கட்டுமானப் பணிகளையும், தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், 

கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.27.15 இலட்சம் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், குழந்தைகள் நேய உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.27.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் உரிய காலகட்டத்தில் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். 

ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீரபுத்திரன், செயற்பொறியாளர் (வளர்ச்சி) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்  வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜாக்லின் அமலா, உதவிப் பொறியாளர்கள் ரவி,  பிரான்சிஸ்கா, அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

BalaDec 6, 2023 - 08:15:56 AM | Posted IP 172.7*****

@Ravi. Correct question. Avlo chinna bridge ah varushakanakka kattitu irukanga. 2020 la udachathu. Korampallam ITI ithanaikum collectorate pakkathula iruku.

ஏரியா மக்கள்Dec 5, 2023 - 06:35:08 PM | Posted IP 162.1*****

ஊருக்குள்ளே சிமெண்ட் சாலையில் மண் தேங்கி இருக்கு. அதுல கண்டுக்க துப்பில்லை

raviDec 5, 2023 - 05:42:35 PM | Posted IP 172.7*****

korampallam ITI munpaka kattimutikkatha palatha parviyittara

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory